ராம் கண் விழித்து பார்த்தவுடன் பக்கத்தில் இருந்த அற்புத விளக்கில் இருந்த பூதம் வந்து கேட்டது
"சரி.. உன்னோட மூணாவது ஆசை என்னனு சொல்லு.. நிறைவேத்தி விட்டு நான் உன்கிட்டேந்து உத்தரவு வாங்கிக்கிறேன் ..".
"என்னது ? மூணாவது ஆசையா ? நான் இப்பதானே முழிச்சேன் .."
"இல்ல .. இல்ல .. நீ மொதல ஒன்னு ஆசையா கேட்ட.. " "அப்புறம் அதனால நடந்தது எல்லாம் மாறனும்ன்னு, எனக்கு எல்லாம் மறக்கணும்ன்னு அப்படிங்கறது ரெண்டாவது ஆசையா கேட்ட.. அதான் எல்லாம் மறந்துட்ட .. "
"அப்படியா ?"
"ஆமாம். ஆமாம். மூணாவதா உன்னோட கடைசி ஆசை என்னனு கேளு .. நான் கிளம்பனும் .."
"எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை.. பொண்ணுங்க மனுசுல என்ன நினைக்குராங்கன்னு எனக்கு தெரியனும். அதனால எவ்வளோ பிரச்சனை வந்தாலும் சரி. இதுதான் என்னோட நிறைவேறாத ஆசை."
பூதம் சிரிச்சுகிட்டே "ஹா! ஹா! சரி உன் விருப்பம். ஜீ பூம் பா !"
ராம் "ஹையா. ரொம்ப சந்தோசம். நீ கிளம்பலாம்.."
"ஓகே. நான் கிளம்புறேன். ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன். நீ இப்ப மூணாவதா கேட்டது போலவே தான் முதலேயும் கேட்ட. என்ஜாய் பை. பை."
"ஞே .."